திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தம் தொழிலாளர்கள் அதிர்ச்சி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 மே, 2022

திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தம் தொழிலாளர்கள் அதிர்ச்சி!

வரலாறு காணாத வகையில் நூல் விலையேற்றத்தால் சாமானிய கூலித் தொழிலாளர்களை மிகவும் பாதிக்கிறது, திருப்பூரில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்படுகின்றன‌, இதில் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள்  பணிபுரிகின்றனர்.


நூல் விலை ஏற்றம் எதிரொலியாக வரும் மே 16 முதல் மே21 வரை பனியன் கம்பெனிகள் அனைத்தும் இயங்காது என்று பனியன் சங்கத்தினர் அறிவிப்பு, தினமும் சுமார் ரூ 200 கோடி அளவு வர்த்தகம் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது, இந்த ஆறு நாள் வேலை இழப்பு என்பது சாமானிய பனியன் தொழிலாளர்களை அதிர்ச்சியடைய வைக்கிறது என்று பனியன் தொழிலாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர், உடனடியாக அரசு இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad