பள்ளி மாணவர்களுக்கு புதிதாக, 10 வகை விளையாட்டு போட்டிகளை, இந்த ஆண்டு முதல் நடத்த, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

பள்ளி மாணவர்களுக்கு புதிதாக, 10 வகை விளையாட்டு போட்டிகளை, இந்த ஆண்டு முதல் நடத்த, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு புதிதாக, 10 வகை விளையாட்டு போட்டிகளை, இந்த ஆண்டு முதல் நடத்த, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளிக் கல்வி கமிஷனரக இணை இயக்குனர் அமுதவல்லி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 10 வகை விளையாட்டுகள், இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்ய வேண்டும்.


அவர்களுக்கு கடற்கரை கையுந்து, குத்துச்சண்டை, சுண்டாட்டம், சிலம்பம், ஜூடோ, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டேக்வாண்டோ, ஸ்குவாஷ், வளையப்பந்து ஆகிய, 10 வகை விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும், இதற்காக, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வரும், 28 முதல், 30ம் தேதி வரை மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 


38 மாவட்டத்துக்கு, 760 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு, ஆசிரியர்கள் உரிய முறையில் தயாராக வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad