மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் முடிந்துவிட்டதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறுகிறார். நாங்கள் நேரில் சென்று பார்த்தால், ஏற்கெனவே இருந்த செங்கல்லையும், பெயர் பலகையையும் கூட காணவில்லை. 4 நாட்களுக்கு முன் காங்., எம்.பி மாணிக்கம் தாகூர் வந்து பார்த்திருக்கிறார்.
ஒரு பணியும் நடக்கவில்லை. இந்த 4 நாட்களுக்குள் 95% பணிகளை புல்புல் பறவையை வைத்து முடித்திருப்பார்கள் போல. திட்ட மதிப்புக்கான ஒப்புதலையே இன்னும் ஒன்றிய அமைச்சரவை வழங்கவில்லை. அதற்குள் 95% பணிகள் முடிந்ததாக கூறுகிறார்கள். பொய் சொல்வதை மட்டுமே முழு நேர பிழைப்பாக வைத்திருக்கிறது பாஜக என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக