மும்பை விமானத்தில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 665 அரியவகை உயிரினங்களை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மும்பை விமான நிலையத்தில் உள்ள சரக்கு பிரிவு வளாகத்தில் சனிக்கிழமை சோதனை நடத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட ஆமைகள், பாம்புகள், உடும்புகள் மற்றும் மீன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
அதன்படி மொத்தம் 665 விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவை எங்கிருந்து கடத்தி வரப்பட்டன? யார் கடத்தி வந்தனர்? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக