அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 321 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வழங்கினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 ஏப்ரல், 2023

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 321 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வழங்கினார்.


அரியலூர் மாவட்டம்,  ஓட்டக்கோவில் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி பேசியதாவது, தமிழக அரசின் உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்றைய தினம் அரியலூர் வட்டம், ஓட்டக்கோவில் கிராமத்தில்  மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலர்களும் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்ததுடன் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களும் பெற்று தீர்வு காணப்பட்டது. இம்முகாமிற்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 294 மனுக்கள் பெறப்பட்டு, 275 மனுக்கள் ஏற்கப்பட்டும், 13 மனுக்கள் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டும், 06 மனு விசாரணையில் உள்ளது. 


இன்றைய தினம் நடைபெற்ற இம்முகாமில் 99 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. மேலும் இம்முகாமில், வருவாய்த் துறையின் சார்பில் 26 பயனாளிக்கு ரூ.3.12 லட்சம் மதிப்பில் முதியோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியத் தொகையும், 30 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றம் ஆணைகளும், 17 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாற்றம் ஆணைகளும், 13 பயனாளிகளுக்கு ரூ.1.56 லட்சம் மதிப்பில் வீட்டுமனைப் பட்டாக்களும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.60,000/- மதிப்பில் வீட்டு மனைப் பட்டாக்களும், 13 பயனாளிகளுக்கு விதவை, வாரிசு, சிறு குறு விவசாயி சான்றிதழ்களும், வேளாண்மைத் துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.10,000/- மதிப்பில் வேளாண் கருவிகளும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.10,000/- மதிப்பில் வேளாண் இடுபொருட்களும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.18,000/- மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் விலையில்லா சலவைப் பெட்டிகளும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் 76 பயனாளிகளுக்கு ரூ.9.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 89 பயனாளிகளுக்கு ரூ.1.51 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 18 மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு ரூ.51.30 லட்சம் மதிப்பில் சுய தொழில் கடனுதவிகளும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 08 பயனாளிகளுக்கு கிசான்; கிரிடிட் கார்டுகளும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டத்தின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 10 பயனாளிகளுக்கு பிற நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 321 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.



இம்முகாமில், வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம், மகளிர் திட்டம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை,  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், அஞ்சலகத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அனைத்துத் துறை மாவட்ட நிலையிலான அலுவலர்கள் தங்களது துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் அதனை பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்கள்.


அரியலூர் ஒன்றியம், ஓட்டக்கோவில் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 80 சதவீதம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஓட்டக்கோவில் ஊராட்சியை தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே போன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள உள்ள அனைத்து ஊராட்சிகளையும் தன்னிறைவு பெற்ற ஊராட்சிகளாக மாற்ற தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதுடன் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.


மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மகளிர் திட்டத்தின் சார்பில் அரசால் சுய உதவிக் குழுக் கடன்கள் குறைவான வட்டியில் வழங்கப்பட்டு வருகிறது. மகளிருக்கு இலவசமாக கடன் வழங்காமல் குறைவான வட்டியில் கடன் வழங்கி சுய தொழில் செய்து அதன் மூலம் கடனை  முறையாக திரும்ப செலுத்துவதன் மூலம் மகளிருக்கு நல்ல வருமானம் கிடைப்பதுடன் அவர்களது தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது.


கடன் தவணையை முறையாக செலுத்துவதால் மறுபடியும் கூடுதலாக கடன் வழங்க இயலும். எனவே, மகளிர் சுய உதவிக் குழுவினர் சுய தொழில் கடன்களை முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தில் குடும்பத் தலைவிகளின் பங்கு முக்கியமானதாகும். எனவே, மகளிருக்கு சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அஞ்சலகத் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறந்த சேமிப்புத் திட்டங்கள் குறித்து அஞ்சலகத் துறை அலுவலர் மூலம் இம்முகாமில் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. எனவே, குடும்பத்தின் எதிர்கால முன்னேற்றத்தினை கருத்தில் கொண்டு மகளிர் அனைவரும் இன்று முதல் தவறாமல் சேமிக்கும் பழக்கத்தினை பின்பற்ற வேண்டும். மேலும், மகளிர் சுய உதவிக் குழுவினர் வழங்கிய கோரிக்கை மனுக்களின் மீது விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


மேலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதுடன் சுய தொழில் செய்ய வங்கி கடனும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அரியலூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 


இதே போன்று அரியலூர் மாவட்டத்தில் தகுதியுள்ள நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பிற மாதாந்திர உதவித்தொகை வழங்கும் வகையில் தகுதியுள்ள மனுக்களுக்கு வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  எனவே, தமிழக அரசின் இதுபோன்ற நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


முன்னதாக, இம்முகாமில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர்த்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர்  பார்வையிட்டார்.


இம்முகாமில் மகளிர் திட்ட இயக்குநர் முருகண்ணன், வேளாண் இணை இயக்குநர் பழனிச்சாமி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தோட்டக்கலை உதவி இயக்குநர் .சரண்யா, வட்டாட்சியர் கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் செங்கமலை மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/