ரமலான் பண்டிகையில் தேர்வு இருப்பதால் தேதியை மாற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 ஏப்ரல், 2023

ரமலான் பண்டிகையில் தேர்வு இருப்பதால் தேதியை மாற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.


ரமலான் பண்டிகையில் தேர்வு  இருப்பதால் தேர்வு தேதியை  மாற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முதன்மை கல்வி அலுவரை சந்தித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். இதில் தலைவர் நபில் அஹ்மத், செயலாளர் ஹுசைன் ஜவாஹிரி, பொருளாளர் செய்யது அகமது கரீம், துணைத் தலைவர் முகம்மது யாசிர், துணைச் செயலாளர் நூருல் அமீன், முகம்மது கியாசுதீன், முகம்மது ராபி, நிவாஸ் ஆகியோங கலந்து கொண்டனர் மனுவில் கூறியிருப்பதாவது -

இந்தியாவில் பல சமூகத்தைச் சார்ந்த, பல கொள்கை சார்ந்த மக்கள் வசித்து வருகின்றார்கள். இது மத சார்பற்ற நாடாகும்.  அனைவருடைய கொள்கையையும் கருத்தில் கொண்டு இந்திய அரசியல் சாசன சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் கொண்டாடக்கூடிய இரண்டு பெரு நாட்களுக்கும் அரசு விடுமுறை  வழங்குகின்றது.  ஒன்று,  ரமலான் பண்டிகை. மற்றொன்று, பக்ரீத் பண்டிகை. பள்ளிக் கல்வித்துறை சார்பாக தற்போது  6,7,8,9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 21 ம் தேதி தேர்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.  அவர்கள் திட்டமிட்டுள்ள அந்தத் தேதியில் ரமலான் பண்டிகை வரக்கூடிய ஒரு சூழல் உள்ளது. ரமலான்  பண்டிகை  பிறை தென்படுவதைப் பொருத்து தீர்மானிக்கப்படுகிறது. 


இதன்படி ஏப்ரல் மாதம் 21-ம் தேதி அல்லது 22-ம் தேதி ரமலான் பண்டிகை வர உள்ளது. பண்டிகை நாளில் தேர்வு இருப்பதால் இஸ்லாமிய மாணவ, மாணவிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். இதன்மூலம் இஸ்லாமிய மாணவ, மாணவிகள் மனநிலை பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே  ஏப்ரல் மாதம் 21-ம் தேதி அல்லது 22-ம் தேதி ஆகிய இந்தக் குறிப்பிட்ட நாட்களில் தேர்வு வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/