காரியாபட்டியில் 108 ஜோடி மணமக்களுக்கு இலவச திருமணம் அசேபா நிறுவனம் சார்பாக நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

காரியாபட்டியில் 108 ஜோடி மணமக்களுக்கு இலவச திருமணம் அசேபா நிறுவனம் சார்பாக நடைபெற்றது.


காரியாபட்டியில் 108 பேருக்கு இலவச திருமணம் நடைபெற்றது.  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அசேபா நிறுவனம் சார்பாக, 108  ஜோடிகளுக்கு சர்வமத  இலவச திருமணம் அன்னபூரணி ஆலய வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, அசேபா நிர்வாக இயக்குனர் லோகநாதன் தலைமை வகித்தார். தலைவர் சந்திர பால் முன்னிலை வைத்தார். 


வேதாத்திரி மகரிஷி ஆஸ்ரமம் நிறுவனர் அழகர் ராமானுஜம், பிஷப் பீட்டர் ரெமிஜியஸ், மதுரை காதர்மைதீன் ஆகியோர் முன்னிலையில், 108 ஜோடி மணமக்களுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு, உலக நலனுக்காகவும் மண்வளம் காக்கவும் பெண்மையை போற்றும் வகையில் அன்னபூரணி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

விழாவில்,  திருமணம் செய்துகொண்ட மணமக்களுக்கு சீர்வரிசை மற்றும் விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தோணுகால் ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், டாக்டர் சாரல் தங்கம், சர்வ சேவா பள்ளிகள் இயக்குனர் வசந்தா நடராஜன், உலகநாதன்,  உட்பட பலர் கலந்து    கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அசேபா திட்டப் பணியாளர்கள் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad