விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கல்குறிச்சியில் தமிழக அரசின் இ.சேவை மையம் திறப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கல்குறிச்சியில் தமிழக அரசின் இ.சேவை மையம் திறப்பு.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் அமல ரத்த பரிசோதனை மைய வளாகத்தில், தமிழக அரசு இ.சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. 


விழாவுக்கு, விருதுநகர் தபால்நிலைய மக்கள் தொடர்பாளர் பால்ச்சாமி தலைமை வகித்தார். இ. சேவை  மைய நிர்வாகி முனீஸ்வரன் முன்னிலை வகித்தார். எஸ்.பி.எம்.   டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, இ.சேவை மையத்தை திறந்து   வைத்தார்.  விழாவில், மனித பாதுகாப்பு கழக மாவட்ட செயலாளர் பிரின்ஸ், சாய்பாபா பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர் மகேஸ்வரி, ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், கிராம நிர்வாக அதிகாரிகள் ராம்குமார், மணிபாரதி, மணிமுத்து மற்றும் சமூக ஆர்வலர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad