வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்டு-12 ஜெனிவா உடன்படிக்கை நாள் விழாவில் ரெட்கிராஸ் உறுதிமொழி ஏற்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்டு-12 ஜெனிவா உடன்படிக்கை நாள் விழாவில் ரெட்கிராஸ் உறுதிமொழி ஏற்பு.

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்டு-12 ஜெனிவா உடன்படிக்கை நாள் விழாவில் ரெட்கிராஸ் உறுதிமொழி ஏற்பு. 




வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரெட் கிராஸ் சார்பில் உறுதிமொழி ஏற்பு
      ஜெனிவா உடன்படிக்கை 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ல் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜெனிவா உடன்படிக்கை நாள் ஆகஸ்டு 12 அன்று கொண்டாடப்படுகிறது. ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் ஜெனிவா உடபடிக்கை குறித்து விளக்கி பேசினார்.
வேலூர் மாவட்ட ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பும் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பும் இணைந்து இன்று 12.082023 காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.


பள்ளித்தலைமையாசிரியர் கோ.சரளா தலைமை தாங்கினார்.  முன்னதாக அறிவியல் ஆசிரியர் எஸ்.கலைச்செல்வன் வரவேற்று பேசினார். உதவித்தலைமையாசிரயர் எம்.மாரிமுத்து, காட்பாடி ரெட்கிராஸ் அவை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.  


ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் ஜெனிவா உடபடிக்கை குறித்து விளக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது..
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் 1949ஆம் ஆண்டு ஒப்பந்தங்களை இணைந்த்து சில கொள்கைகளையும் சேர்த்து இறுதி செய்யப்பட்டு ஏற்பட்டது.  ஒரு போர் மண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் கைதிகளின் அடிப்படை மற்றும் போர்க்கால    உரிமைகளை வரையறை செய்கின்றது.  இந்த ஒப்பந்த உடன்படிக்கையில் இந்தியா உள்ளிட்ட 195 நாடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாக நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உடன்படிக்கையைன் அடிப்படையில் போராட்ட களத்தில் காயமடைநத் அல்லது நோயுள்ள இராணுவத்தினருக்கு நிவாரணம் வழங்குவது, கடலில் வைத்து காயமடைந்த அல்லது நோயுற்ற படையினருக்கு நிவாரணம் வழங்குவது புத்த கைதிகளை நடத்து விதம், யுத்த காலத்தில் சாதாரண குடிமக்களின் வாழ்வாதாரம் உரிமைகளை காப்பது ஆகிய நோக்களுக்காக இந்த உடன்படிக்கை கையெழுத்தானது.  அதனை இந்தியா உள்ளிட்ட 195 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. என்றார்.
பள்ளி ஜுனியர் ரெட்கிராஸ் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
முடிவில் பள்ளி ஜெஆர்சி கவுன்சிலர் ஜெ.செலின் நன்றி கூறினார்.
 
 
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/