அதிமுக சார்பில் அரியலூர் நகரில் தண்ணீர் பந்தல் முன்னாள் அரசு கொறடா திறந்து வைத்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 27 ஏப்ரல், 2024

அதிமுக சார்பில் அரியலூர் நகரில் தண்ணீர் பந்தல் முன்னாள் அரசு கொறடா திறந்து வைத்தார்.


அரியலூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல்கள் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் பங்கேற்று, திருமானூர் பேருந்து நிலையம், கீழப்பழுவூர் கடைவீதி, அரியலூர் பேருந்து நிலையம், அரியலூர் அடுத்த செந்துறை ரவுண்டானா ஆகியபகுதிகளில் கோடைக்கால தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோா், தர்பூசணி, வெள்ளரி, தண்ணீர் ஆகியவற்றை வழங்கினார். 

நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்எல்ஏ ப.இளவழகன்,  நகரச் செயலாளர் செந்தில், அம்மா பேரவை இணைச் செயலாளர் பிரேம் குமார், மாவட்ட அண்ணா தொழிற்ச்சங்க தலைவர் பாஸ்கர், ஒன்றியச் செயலாளர்கள் பாலு, செல்வராஜ், சாமிநாதன், வடிவழகன், வழக்கறிஞர் பரிவு வெங்கடாஜலபதி, ராம.கோவிந்தராஜன், சாந்தி, சுகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


அதேபோல், செந்துறை அடுத்த ஆர்.எஸ்.மாத்தூரில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான இளம்பை ரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.


அரியலூர் மாவட்ட செய்தியாளர் ஜஹாங்கீர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/