அதன்படி பெரம்பலூர் மாவட்ட குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக செந்துறை வடக்கு ஒன்றியத்தின் சார்பாக ஆர்.எஸ்.மாத்தூர் பகுதியில் நேற்று ஒன்றிய அவைத்தலைவர் குழுமூர் செல்வம் ஏற்பாட்டில் பேருந்துநிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த கோடைகால நீர் மோர் பந்தலை பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்செல்வன் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர்,தர்பூசணி ,இளநீர் உள்ளிட்டவைகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளர் சந்திரகாசன், பெரம்பலூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்பரப்பி செந்தில்குமார், இலைக்கடம்பூர் ஊராட்சி மன்றத்தலைவர் கோகிலாஅழகுதுரை ,தளவாய் கிருஷ்ணன், புதுபாளையம் ராதா ,பெரும்பாண்டி தங்கராசு,குழுமூர் பாண்டியன்,இலைக்கடம்பூர் பழனிவேல்,முள்ளுக்குறிச்சி கார்த்தி,துளார் பரமசிவம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் ஜஹாங்கீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக