இரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து - பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு தமிழ் மரபுப்படி “நடுகல்" நிறுவிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ரூ.10 இலட்சம் நிதியுதவி வழங்கியமைக்காக நன்றி தெரிவித்து தாய்லாந்து காஞ்சனபுரியில் 01.05.2024 அன்று நடைபெறவிருக்கும் "நடுகல்" திறப்பு விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கடந்த 11.04.2024 அன்று தாய்லாந்து தமிழ்ச் சங்கத்தினர் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்தனர்.
தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள இவ்விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் கலந்து கொள்வதை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக