சென்னை வில்லிவாக்கம்பகுதியில் ரவுடி ஓட ஓடவெட்டி கொலை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 29 ஏப்ரல், 2024

சென்னை வில்லிவாக்கம்பகுதியில் ரவுடி ஓட ஓடவெட்டி கொலை.


சென்னை வில்லிவாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் சரத்குமார் வயது 30 இவர் 2019 ஆம் ஆண்டு பெரவள்ளூர் பகுதியில் ஜானகிராமன் என்பவரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார்.


வில்லிவாக்கம் சப்வே அருகே உள்ள நார்த் ரெட் ஹில்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் தனது இல்லத்திற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார் அப்பொழுது அங்கு வந்த மரும கும்பல் ஒன்று அவரை சரமாரியாக ஓட வெட்டி கொலை செய்ததும், இந்த சம்பவம் குறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணையில் சரத்குமாரை கொலை செய்வதற்கு முன்பாக இந்த மர்மகுண்டில் ஒருவர் அவரது நண்பரின் தொலைபேசி குறுஞ்செய்தி மூலமாக சரத்குமாரை கொலை செய்யப் போவதாக கூறியுள்ளார், கொலை செய்த பின்பு அதே நபர் அவர்களின் நண்பருக்கு whatsapp வாய்ஸ் மெசேஜ் மூலமாக சரத்குமாரை கொலை செய்து விட்டதாக கூறி உள்ளார். பட்டப்பகலில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் விரிவாக்கம் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/