நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 மே, 2024

நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.


கலைஞர் கருணாநிதி அவர்களின் பாராட்டு விழா நிகழ்ச்சியில் அஜித்குமார் அவருக்கு நேராக தன்னை மிரட்டி தான் இந்த விழாக்கு வரவில்லை என்று தைரியமாக கூறியதை எனக்கு பிடித்தது அதனால் தான் அவருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து கூறினேன் என்று ஜெயக்குமார். 


சென்னை ஓட்டேரி அருகே நீர்மூர்த்தன் பந்தல் திறப்பு விழாவில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ராயபுரம் மனோ மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் அவர்கள் கூறுகையில், உழைப்பாளர் தினத்தன்று பிறந்தநாள் காணும் அஜித் குமார் அவர்களை வாழ்த்துகளை தெரிவித்தார் அவர் தொடர்ந்து பேசுகையில் அஜித்குமார் அவர்கள் கலைஞர் அவர்களின் பாராட்டு விழாவில் கலைஞர் அவர்களின் முன்னிலையிலும் தான் இங்கு தானாக வரவில்லை என்றும் தன்னை இழுத்து வந்துள்ளார்கள் என்று கூறி கலைஞருக்கு முன்பாகவே கூறியதால் அவரது தைரியம் எனக்கு பிடித்திருந்தது அதனால் தான் அவருக்கு நான் பாராட்டுகள் அவரது தைரியம் எனக்கு பிடித்திருந்தது அதனால் தான் அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன் என்று கூறினார். 


இத்தனை தொடர்ந்து பேசிய அவர் திமுக ஆட்சி உழைப்பாளர்களுக்கு எதிரான ஆட்சியாக உள்ளதாகவும் கூறினார், கூட்டணிக்காக டெல்லி போக தெரிந்த ஸ்டாலின் அவர்களுக்கு கூட்டணிக்காக கர்நாடகா போகத் தெரிந்தஸ்டாலின் அவர்களுக்கு தண்ணீருக்காக பேசுவதற்கு நேரமில்லை என்றும் கூறிய ஜெயக்குமார். இதேபோன்று தண்ணீர் பஞ்சம் நிலவிய பொழுது எம்ஜிஆர் அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நேரடியாக அப்பொழுது இருந்த கர்நாடக முதல்வரை சந்திக்க சென்று விட்டார் அங்கு சென்று உணவருந்தி விட்டு அவர்கள் தண்ணீர் கொடுத்த போது எனக்கு தண்ணீர் வேண்டாம் நான் தண்ணீர் குடிக்க வரவில்லை என் தமிழகத்திற்கு தண்ணீர் கேட்டு வந்தேன் என்று கூறி தண்ணீர் பெற்று தந்தார் என்றும் கூறிய ஜெயக்குமார். 


முதல்வர் வெளிநாட்டில் சென்று கோல் விளையாடிக் கொண்டிருக்கிறார் தமிழகத்தில் பிரச்சனையே இல்லையா 48 மணி நேரத்தில் 10 கொலைகள் நடந்துள்ளன தமிழகத்தில் எளிதாக கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் கிடைக்கிறது கஞ்சா போதையில் போலீசாரிடமும் பொதுமக்களிடமும் பிரச்சினையில் ஈடுபடுகிறார்கள் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/