சென்னை கொடுங்கையூரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பெரம்பூர் தொகுதி செயலாளர் சரவணன் என்பவர் 4 கோடி மோசடி செய்ததாக புகார் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 மே, 2024

சென்னை கொடுங்கையூரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பெரம்பூர் தொகுதி செயலாளர் சரவணன் என்பவர் 4 கோடி மோசடி செய்ததாக புகார்


சென்னை கொடுங்கையூரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பெரம்பூர் தொகுதி செயலாளர் சரவணன் என்பவர் 4 கோடி மோசடி செய்ததாக புகார், கொடுங்கையூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த நிலையில் கொடுங்கையூர் குற்றப்பிரிவு காவல் துறையினர் புகாரை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு, தொழில் தொடங்கி பணம் இரட்டிப்பு செய்து தருவதாக ஆசை வார்த்தைகள் கூடி சுமார் 50க்கும் மேற்பட்டோர் இடம் 4 கோடி ரூபாய் வரை மோசடி என தகவல்.


சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி தோட்டம் ஒன்பதாவது தெருவை சேர்ந்தவர் சரவணன் இவர் நாம் தமிழர் கட்சியில் பெரம்பூர் தொகுதி செயலாளராக உள்ளார், இவரது மனைவி ஹேமாவதி இவர் கணவர் நடத்தும் தொழிலில் அவருடன் பங்குதாரராக உள்ளதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் சரவணன் அந்த பகுதியில் உள்ள அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் எனக்கு சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இடம் அழகு சாதன பொருட்கள் விற்பனை முகவர் தொழில் தொடங்க உள்ளதாகவும் அதில் பணம் செலுத்தி பங்குதாரராக சேர்ந்தால் வரும் லாபத்தில் சரிபாதி தருவதோடு தங்களுடைய பணத்திற்கு இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி சுமார் 50க்கும் மேற்பட்டோரிடம் ரூபாய் 4 லட்சம் வரை வசூல் செய்ததாக தெரிய வருகிறது.


இதனை அடுத்து வசூல் செய்த பணத்தினை தொழிலில் முதலீடு செய்யாமல் சரவணன் அவருடைய மனைவியுடன் இணைந்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பணம் கொடுத்தவர்கள் அவரிடம் அது குறித்து கேட்கும் பொழுது இன்று தருகிறேன் நாளை தருகிறேன் என காலதாமதம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.


ஒரு கட்டத்தில் சரவணனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அவரது வீட்டிற்கு சென்று கேட்ட பொழுது தற்போது என்னிடம் பணம் இல்லை எனவும் தொழிலில் முதலீடு செய்து அதில் நட்டம் ஏற்பட்டு விட்டதாகவும் எனவே தங்களிடம் வாங்கிய பணத்தை கொடுக்க காலதாமதம் ஆகும் எனவும் அதுவரை பொறுத்திருக்க வேண்டும் எனவும் கூறியதாக தெரிய வருகிறது, அடுத்து பாதிக்கப்பட்டோர் பணம் வசூல் செய்ய வேண்டி அவர் கொடுத்த கால அவகாசத்தை ஏற்றுக் கொண்டனர், இன்னும் அந்த சொன்ன நேரத்திலும் பணம் தராமல் அவர் இழுத்து அடித்து வந்ததாக தெரிகிறது.


இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் மீண்டும் அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது அவர்களுக்கு ஒரு காசோலைகளை வழங்கி இந்த குறிப்பிட்ட தேதியில் வங்கியில் செலுத்தி பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என கூறி போலிக் காசோலை ஒன்றை கொடுத்ததாகவும் தெரிய வருகிறது, இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அந்த காசோலை வங்கியில் செலுத்த போது அதில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.


இதனை அடுத்து இது குறித்து மூன்றாவது முறையாக சரவணன் இடம் சென்று கேட்டபொழுது நான் நாம் தமிழர் கட்சியில் பெரம்பூர் தொகுதி செயலாளராக உள்ளேன் என்னுடைய கட்சியில் பல்வேறு வழக்கறிஞர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர் என்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எனக்கு ஆதரவாக உள்ளார்கள் என்றும் அதனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என மிரட்டும் தோனியில் பேசியதாக தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் சரவணன் வீட்டிற்கு சென்ற பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சரவணன் வீடு பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்


மேலும் இது குறித்து அக்கம் பக்கம் விசாரித்த போது அவர் 10 நாளைக்கு முன்பே வீட்டை விட்டு குடும்பத்துடன் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என கூறியவுடன் பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் அதனை தொடர்ந்து சரவணன் செல்போன் என்னை தொடர்பு கொண்ட போது அது அனைத்து வைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்று கொடுங்கையூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இளையராஜாவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.


அந்த மனுவினை ஏற்க மறுத்த காவல் ஆய்வாளர் இது குறித்து வழக்கறிஞர்களுடன் சென்று கோர்ட்டில் ஆணை பெற்று வந்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க தயார் என கூறியதாக தெரிய வருகிறது, இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்வது செய்வது அறிவது தெரியாமல் திகைத்தபடி கொடுங்கையூர் காவல் நிலையம் முன்பு நின்றது பார்க்க பரிதாபமாக இருந்தது.


பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட புகாரினை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட நபரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் பொதுமக்களை அலட்சியப்படுத்திய காவல் ஆய்வாளரின் செயல் தற்போது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/