திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரபலமான கல்லூரியில் ஒன்று பிஷப் தார்ப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது...
இந்த கல்லூரியில் இந்த 2023'ஆண்டு மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் திருச்சி டான்-போஸ்கோ வழிகாட்டியின் படி நடைபெற்றது.. கல்லூரி முதல்வர் முனைவர்.விக்டர் லாசரஸ் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார்.. திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகமை குறித்து சிறப்பாக பேசினார்..மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் சுமார் 250க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பங்கேற்றனர்..இதில் 9 பிரபலமான நிறுவனங்களை சார்ந்த HR இம்முகாமில் கலந்து கொண்டு நேர்காணல் செய்தார்கள் 250க்கும் மேற்பட்ட வேலை தேடுவோர் வந்து பங்கு பெற்றனர் அவர்களில் 150 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது..இந்த முகாமில் கல்லூரி துணை முதல்வர் பிரேம்நாத், Dean and HOD மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர் இம்முகாமினை ஏற்பாடுகளை பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு Deanary சார்ந்த திருமதி.பானு (Dean),சைமன் பீட்டர் பொன்சிங் (Associate Dean) , மாணிக்கம் (Co-ordinateer) மற்றும் டான் போஸ்கோ வழிகாட்டியை சேர்ந்த எபினேசர் ராஜா மற்றும் அருமை ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக