அரசு பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடு பட்டதாக பொது மக்களால் தாக்கப்பட்ட இளைஞர் !
காவல் துறையிடம் ஒப்படைப்பு.
குடியாத்தம் , ஜன 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி யிடம் பாலியல் சீண்டலில் நேன்றுமாலை (27.01.2026) வேலூர் மாவட்டம் காட்பாடி யில் இருந்து கே.வி.குப்பம் வழியாக குடியாத்தம் வரை சென்ற அரசுபேருந்தில் கல்லூரி மாணவி ஒருவர் பயணித்துள் ளார் (மாணவி தூங்கிக்கொண்டிருந்துள் ளார்). அப்போது கே.வி.குப்பம் பேருந்து நிறுத்தத்தில் குடியாத்தத்தை சேர்ந்த (எம்ஜிஆர் நகரை சேர்ந்த .இளைஞர் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார். அவர் கல்லூரி மாணவி அருகே அமர்ந்து திடீரென மாணவியிடம் பாலியல் சீண் டலில் ஈடுபட்டதாகவும், இதனால் மாணவி அலறி கத்தி கூச்சலிடவே பேருந்தில் பயணித்த சக பயணிகள் மாணவியிடம் விசாரித்து அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் பேருந்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தவுடன் பிடிபட்ட இளைஞரை குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து குடியாத்தம் நகர காவல் துறையி னர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக