குடியாத்தத்தில் மாரியம்மன் திருக் கோ வில் மஹா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் !
குடியாத்தம் ,ஜன 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 35 வது வார்டு அம்பேத்கர் நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு சிறப்பாக நடை பெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் . நாதஸ்வரம் மங்கல இசையுடன் நடைபெற்றது இதில் அம்பேத்கர் நகரில் உள்ள முக்கிய பிர முகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் . மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து ஆசி பெற்றனர்
பின்பு கோபுர கலசத்தில் புனித நீரால் அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அனைவருக் கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டன
குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக