வயது முப்பின் காரணமாக உயிர் இழந்த முதியவரின் கண்கள் உடல் உறுப்புகள் தானம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 ஜனவரி, 2026

வயது முப்பின் காரணமாக உயிர் இழந்த முதியவரின் கண்கள் உடல் உறுப்புகள் தானம் !

வயது முப்பின் காரணமாக உயிர் இழந்த முதியவரின் கண்கள் உடல் உறுப்புகள் தானம்  !
குடியாத்தம் , ஜன 28 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம்  நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நூலகராக பணி புரிந்து ஓய்வு பெற்று, நெல்லூர்பேட்டை சன்னதி தெருவில் வசித்து வந்த கே.எஸ். மணி(வயது 85)  27.01.26 இரவு 10மணி யளவில் காலமானார். பல வருடங்களு க்கு முன்  அன்னாரின் கைப்பட எழுதி வைத்த கண் மற்றும் உடல்தான விருப்ப கடிதத்திற்கிணங்கவும், அவரது சகோத ரர் கே.எஸ்.முருகேசன் ஒப்புதல்படியும் அவரது கண்கள் வேலூர் டாக்டர் அகர் வால் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கபட்டது இதற்கான முதல் தகவலை குடியாத்தம் ரோட்டரி சங்க மூத்த மற்றும் சாசன உறுப்பினர் டாக்டர் எம்.எஸ்.திரு நாவுக்கரசு அளித்தார். மேற்படி இயற்கை எய்திய நபரின் உடல்தானத்திற்கான ஏற் பாடுகள் நடந்து வருகிறது. கண் மற்றும் உடல்தான ஏற்பாடுகளை, சங்க கண் உடல் தானக் குழு தலைவர் எம். ஆர். மணி செய்தார். இதுவரை இவர் ஏற் பாட்டில்  197 ஜோடி கண்கள்  தானம் செய்யப்பட்டுள்ளது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad