குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்து ள்ள அத்தி கல்வி குழுமத்தின் சார்பாக அரசு வழங்கிய மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி !
குடியாத்தம் ,ஜன 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த
.அத்தி கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ சௌந்தரராஜன் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்து தமிழ்நாடு அரசு திட்டங்கள் , 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம் மற்றும் கல்வியில் முன்னேற்றத்திற்கான வழி வகைகள் பற்றி விரிவாக எடுத்துரைத் தார். மேலும் குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு உலகம் உங்கள் கையில் என்னும் திட்டத்தின் கீழ் தமிழக அரசு மடிக்கணினி அனைவருக்கும் வழங்கி படிப்பில் முன்னேற வேண்டும் மற்றும் நல்ல அறிவுத்திறன் சார்ந்த செயல்களுக்கு மட்டும் பயன்படுத்தி பயன் பெறவேண்டும் என்றும் அதனால் தனது வாழ்க்கையும் மாறும் , தன் குடும்பமும் நல்ல நிலைக்கு உயரும் என்றும் அறிவுறுத்தினார். இதில்
குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே குமரவேல் அவர்கள் ,அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஷ் ராஜா மணி அவர்கள் அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனிதுரை ஆகியோர் முன்னிலை வைத் தனர் . மருத்துவர்கள், செவிலியர்கள், துறைதலைவர்கள் , ஆசிரியர்கள் ஆகி யோர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண் டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக