தாளமுத்துநகர் பகுதியில் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

தாளமுத்துநகர் பகுதியில் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது.

தூத்துக்குடி தாளமுத்துநகர் ராமதாஸ் நகரை சேர்ந்த வேலர் மகன் தொம்மைராஜ் (29) என்பவரின் அண்ணன் மகனான 14 வயது சிறுவனை  கடந்த 26.08.2023 அன்று தாளமுத்துநகர் ஜெ.ஜெ நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். 



அப்போது அங்கு மதுபோதையில் இருந்த தூத்துக்குடி டி.சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த சேவியர் செல்வராஜ் மகன் அந்தோணி தாமஸ் (20) என்பவர் மேற்படி சிறுவனிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதனையடுத்து தொம்மைராஜ் மற்றும் அவரது உறவினரான சுரேஷ் (25) ஆகியோர் இதுகுறித்து மேற்படி அந்தோணி தாமஸிடம் சத்தம் போட்டுள்ளனர். 


இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி தாமஸ் மற்றும் அவரது நண்பர்களான டி.சவேரியார்புரத்தைச் சேர்ந்த துரை மகன் சந்தோஷ் (19), ஜேம்ஸ்ராஜ் மகன் தினேஷ் (21), அந்தோணி ராஜன் மகன்களான வினோத் ராஜன் (20) மற்றும் பிரதீஷ் (21) ஆகியோர் சேர்ந்து தொம்மைராஜ் மற்றும் அவரது உறவினர்களிடம் தகராறு செய்து அவர்களை கத்தி மற்றும் செங்கலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


இதுகுறித்து தொம்மைராஜ் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் வழக்குபதிவு செய்து மேற்படி எதிரிகளில் தினேஷ் மற்றும் வினோத்ராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மற்ற எதிரிகளை தேடி வருகின்றனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad