விழுப்புரம் நீதிமன்றத்தில் செம்மண் குவாரி வழக்கில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 6 பேர் ஆஜர் வழக்கு விசாரணை வரும் 29ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

விழுப்புரம் நீதிமன்றத்தில் செம்மண் குவாரி வழக்கில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 6 பேர் ஆஜர் வழக்கு விசாரணை வரும் 29ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு

விழுப்புரம் மாவட்டம் வானூர் பூத்துறையில் கடந்த 2006-2011ஆம் ஆண்டில் செம்மண் குவாரி நடத்தியதில் மோசடி நடந்ததாக அமைச்சர் பொன்முடி அவரது மகன்  கௌதம சிகாமணி (கள்ளக்குறிச்சி எம்.பி) கோதை குமார் சதானந்தம் ஜெயச்சந்திரன் ராஜ மகேந்திரன் கோபிநாத் (லோகநாதன் இறப்பு) உள்ளிட்ட எட்டு பேர் மீது கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது இன்று காலை தொடங்கிய இந்த வழக்கின் விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி மற்றும் ராஜ மகேந்திரன், கோபிநாத், கோத குமார், சதானந்தம் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட ஆறு பேர் ஆஜராகினர் மேலும் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி ஆஜராகவில்லை இதில் வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற மாவட்ட நீதிபதி பூர்ணிமா தலைமையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து இந்த வழக்கில் வானூர் கூத்துரை கிராமத்தைச் சேர்ந்த கிராமமாக அலுவலர் விஜயகுமார் ஆஜராகி அரசு தரப்பில் சாட்சியளித்தார்.


அப்பொழுது இந்த வழக்கு தொடர்பான இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் எனக்கு எதுவும் தெரியாது கோப்புகளை அப்பழுதைய வானூர் தாசில்தார் குமாரபாலன் கேட்டுக்கொண்டது பெயரில் கையொப்பம் மட்டுமே விட்டேன் என தெரிவித்தார் இதனை அடுத்து வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா வழக்கு விசாரணையை வருகின்ற 29-8-2023 அன்று வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad