தூத்துக்குடி, திருவைகுண்டம் அருகே உள்ள அதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அகழ்வாராய்ச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் வரவேற்று பேசினார், டெல்லி கிஷோர் குமார் பாஷா அறிமுக உரை நிகழ்த்தினார், அவர் பேசும் போது அகழ்வாராய்ச்சி அகழாய்வு குறித்து தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை விளக்கும் விதமாக இந்த இந்த அருங்காட்சியகம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது என கூறினார்.
1876 ஆம் வருடத்தின் பாரம்பரியமிக்க இந்த அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் அமையும் நிகழ்ச்சிக்கு, இதற்கென மலேசிய நாட்டில் இருந்து சுல்தான் தமிழ் கல்லூரியை சார்ந்த 42 மாணவ மாணவியர்கள் வந்து சிறப்பித்தனர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வாழ்த்துரையில் தமிழகத்தின் தொன்மையை தமிழர்களின் பாரம்பரியத்தை இந்த அகழாய்வு மூலம் வெளிப்படுகிறது என பேசினார்.
சிறப்புரை ஆற்றிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உலகத்தில் மிகவும் பழமையான கோயில் பகுதிகளில் அதை தொடர்ந்து வாழ்ந்து வரும் தமிழ் நாகரிகத்தின் அடையாளமாக இந்த அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் விளங்கும் என பெருமையுடன் தெரிவித்தார்.
6000 கோடி ரூபாய் இந்திய கலாச்சாரத் துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இந்த மண்ணின் மைந்தரான பாரதியார் உலகில் மிக தொன்மையானது தமிழ் நாகரீகம் என்று கூறியது போல, உலகத்திலேயே பழமையான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதி மக்களின் கலாச்சாரம் பற்றி அகழ்வாராய்ச்சி மூலம் முன்னோர்களுடைய வாழ்க்கை முறையை தொல்லியல் துறை கண்டறிந்து வருகிறது.
இந்த ஆராய்ச்சியானது நான்கு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஆதிச்சநல்லூர் பரம்பானது இரும்புக் காலத்திற்கு முற்பட்டது என முன்னோர்களின் முதுமக்கள் தாழிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சாமானிய மக்களை மட்டும் இப்பகுதியில் புதைக்கவில்லை வசதியான மக்களும் இதே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரும்பிய, பயன்படுத்திய பொருட்களையும் அவர்களுடனே சேர்த்து முதுமக்கள் தாழியில் வைத்துள்ளனர்.
இங்கு உள்ள முதுமக்கள் தாழிகள் பொது யுகத்திற்கு முற்பட்ட காலமாகும் ஏறத்தாழ 200 முதல் 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். அக்காலத்தில் அவர்கள் பயன்படுத்திய நெல், உமி, திணை போன்ற தானியங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இவை சுமார் 675 வருடங்களுக்கு முற்பட்டது எனவும் 1384 வருடங்களுக்கு முன்பே இப்பகுதியில் மக்கள் கலாச்சார செறிவோடு வாழ்ந்துள்ளனர்.
தற்போது அந்த இடத்தில் சுமார் 3500 வருடங்களுக்கு முன்பு வரை கிடைக்கப்பெற்ற, உபயோகப் படுத்தப்பட்ட பொருட்களை அந்தந்த இடங்களிலேயே வைத்து கண்ணாடி பேழை மூலம் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய நாடு முழுவதும் ஐந்து இடங்களில் இத்தகைய உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியங்கள் உள்ளன. இதில் ஆதிச்சநல்லூர் முதன்மையானதும் தொன்மையானதும் ஆகும். அலெக்ஸாண்டர் ரியா எனும் தொல்லியல் ஆய்வாளர் சேகரித்த சுமார் 5000க்கும் மேற்பட்ட கலைப் பொருள்களை பெர்லின், நெதர்லாந்து போன்ற வெளி நாடுகளில் உள்ள அருங்காட்சியகத்தில் கொண்டு போய் வைத்துள்ளனர்.
2005 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் முதன் முதலாக அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு அதற்கான பணிகள் முன்னெடுப்புடன் நடந்தன. தமிழ் மொழியும் கலாச்சாரமும் மிகவும் பழமை வாய்ந்தது. மேலும் இது போன்ற பல நாகரீக வளர்ச்சியை அகழ்வாராய்ச்சி செய்து, மேலும் வெளிநாட்டுகளுக்கு கொண்டு செல்ல பட்ட நம் பெருமைமிகு அகழ்வாராய்ச்சி பொருட்களை மீண்டும் நமது நாட்டுக்கு கொண்டு வர பாரத பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் கூறினார்.
முன்னதாக அவர் ஆதிச்சநல்லூர் பரம்பில் உள்ள முதுமக்கள் தாழிகளை மற்றும் அகழ்வாராய்ச்சி இடங்களை நேரடியாக சென்று பார்வையிட்டார். தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் தொன்மையை விளக்கும் விதமாக இந்திய தொல்லியல் மற்றும் அகழ்வாராய்ச்சி துறையினர் சார்பில் புத்தகம் வெளியிடப்பட்டது.
தொல்லியல் துறை இயக்குனர் மத்திய அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். விழாவில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்திய தொல்லியல் துறை இணை இயக்குநர் எஸ்.கே.மஞ்சுல், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி சங்கர் கணேஷ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் திருச்சி அகழ்வாராய்ச்சி கண்காணிப்பாளர் காளி ராஜ் நன்றி கூறினார்,
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக