விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தலக்காணி குப்பத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 11 ஏக்கர் பரப்பளவில் செம்மண் குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வந்த நிலையில் நேற்றைய தினம் குவாரி அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் கிராம மக்கள் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்கள் உணவு மற்றும் தண்ணீருடன் வந்துள்ளனர். காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் இருந்து கலந்து செல்லும் படி அறிவுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் இருந்து கலைந்து செல்லவில்லை எனில் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்ததும் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் ஊர் மக்கள் எடுத்துக் கொண்டு வந்த உணவு பொருட்களை எடுத்துக்கொண்டு வந்த வாகனத்தில் முந்தியடித்துக் கொண்டு ஏறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக