இளையான்குடி சிறுபாலையில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

இளையான்குடி சிறுபாலையில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதி இளையான்குடி ஒன்றியம் சிறுபாலை கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியை சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்த்திரு கரு. சாயல்ராம் அவர்கள் ஏற்றி வைத்து வீர வணக்கம் செலுத்தினர். இந்நிகழ்விற்கு மானாமதுரை சட்டமன்றத் தொகுதி செயலாளர் அவர்கள் தலைமை தாங்கினார்.


இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை தெற்கு மாவட்ட தலைவர் திரு அறிவழகன் அவர்கள் கலந்து கொண்டார். சிறுபாலை கிளை பொறுப்பாளர் திரு முருகன் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார். மேலும் இதில் இளையான்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு பாலமுருகன், இளையான்குடி மேற்கு ஒன்றிய தலைவர் திரு ஜேம்ஸ் மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு ஆனந்தன் மற்றும் மானாமதுரை சட்டமன்றத் தொகுதி செய்தி தொடர்பாளர் திரு மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் கட்சியின் கடைக்கோடி தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad