தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் கார் விபத்தில் மின்கம்பம் சேதம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 மே, 2026

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் கார் விபத்தில் மின்கம்பம் சேதம்.

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் கார் விபத்தில் மின்கம்பம் சேதம்

ஸ்பிக்நகர், மே 1- திருச்சி மாவட்டம், பசுமணி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர மகன் அசோக்குமார்(37). இவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று விட்டு தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். 

முத்தையாபுரம் அருகே வந்த போது காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் வாகனம் அருகில் இருந்த சென்டர் மீடியேட்டரில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி சேதமடைந்தது.

விபத்து ஏற்பட்டவுடன் காரின் ஏர்பேக் ஓப்பன் ஆனதால் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்து அனைவரும் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். 

சேதமடைந்த மின்கம்பம் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்கம்பத்தை சரி செய்தனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad