வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை பெறலாம் மற்றும் புகார்களை அளிக்கலாம் - மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 23.04.2026 அன்று பதிவான வாக்குகள் 04.05.2026 அன்று பல்கலைக்கழக வ.உசி. பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளது.
இது தொடர்பாக, இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை பெறுவதற்காக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையினை வாக்கு எண்ணிக்கைக்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக செயல்பட அறிவுரை வழங்கியுள்ளது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த கட்டுப்பாட்டு அறையானது 01.05.2026 முதல் மீண்டும் துவக்கப்பட உள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1800-599-1960 மற்றும் 0461-1950 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை பெறலாம் மற்றும் புகார்களை அளிக்கலாம்.
இந்த கட்டுப்பாட்டு அறையில் போதிய அளவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து தகவல்களை வழங்குவதற்காகவும் மற்றும் புகார்களை களைவதற்காகவும் உள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக