தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 மே, 2026

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.

மே 1- திருப்பூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த சிவா மகன் பிரசாந்த்(24). ஸ்பிக்நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பயிற்சி பெற்று வருகிறார். 

நேற்று முன்தினம் மாலை தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது ட்ரிப் போர்டு அருகே மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் மயக்க நிலையில் கிடந்துள்ளார்.

இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். 

இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad