மூக்குப்பீரி ஏக இரட்சகர் சபை நடுநிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 11 ஏப்ரல், 2026

மூக்குப்பீரி ஏக இரட்சகர் சபை நடுநிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு விழா.

மூக்குப்பீரி ஏக இரட்சகர் சபை நடுநிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு விழா (PTA) கூட்டம் 10.04.2026 வெள்ளிக் கிழமை காலை 11 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

பள்ளியின் ஆசிரியரும் சபையின் தலைமை போதகர்மான சௌந்தரராஜன்  ஜெபித்து இந்த விழாவை ஆரம்பித்து வைத்தார்.

பள்ளியின் தாளாளரும் மற்றும் சபையின் தலைவருமான குரு. மத்தேயு ஜெபசிங் தலைமையில் நடைபெற்றது

சிறப்பு அழைப்பாளராக பள்ளி வட்டார கல்வி அலுவலர் பாபையாஸ், 
நாசரேத் புஷ்பம் & கோ உரிமையாளர் செந்தில் குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பரிசு பொருட்களை வழங்கினர்.

விழாவில் செயலாளரும் பழைய மாணவர் சங்க தலைவருமான த.கோயில்ராஜ் பொருளாளர் ந.நவரத்தினம், சபையின் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஞா. ஜெயபால், 
மோகன் விக்டர், எ. ஆபிரகாம் ராஜன் ,
பொ. நல்லதம்பி ஆகியோர் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தி தாளாளர் குரு. மத்தேயு ஜெபசிங் பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் ஆலோசனைகளை கூறி வாழ்த்துரை வழங்கி பெற்றோர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார்.

பள்ளி மாணவ மாணவிகள் அனைவரின் பெற்றோர்களுக்கும் அன்பளிப்பாக நமது சபைச் சகோதரர் கோவை சுகந்தி ஸ்டில்ஸ் உரிமையாளர் C.ராஜன் ஐந்து லிட்டர் 50 எண்ணம் குக்கர்களை அன்பளிப்பாக வழங்கினார்.

சபைச் சகோதரர் சென்னை தொழிலதிபர் ஜெயசீலன் அலெக்ஸ் நமது பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை அன்பளிப்பாக வழங்கினார்.

கோவை தொழிலதிபர் செல்வன் மற்றும் வழக்கறிஞர் யோ. சாமுவேல் விஜய் ரொக்க அன்பளிப்புகளை வழங்கினர். 

மாணவர்களுக்கும் வருகைதந்த பெற்றோர்களுக்கும் புஷ்பம் அண்ட் கோ உரிமையாளர் செந்தில்குமார் மதிய உணவான பிரியாணி அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad