திருப்பத்தூர் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் திருப்பத்தூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் !
திருப்பத்தூர் ,ஏப்ரல்10-
திருப்பத்தூர் மாவட்டம் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் திருப்பத்தூர் பகுதி யில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நடைபெற இருக்கக்கூடிய 2026 சட்ட மன்றத் தேர்தலை ஒட்டி மருத்துவர் அவர்களின் தரப்பு வேட்பாளர் கே. ஜி. விஜயகுமார் அவர்கள் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் இந்நிகழ்வின் போது வாக்காளர்களுக்கு சிலிண்டர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டு மென கேட்டுக்கொண்டு அவர் களிடம் பரப்புரை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் வன்னியர் சங்க தலைவர் அசோக்குமார், ஒன்றிய இளைஞர் அணி தலைவர் வேலாயுதம் ஆகியோர் கலந்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக