குடியாத்தம் அருகே கஞ்சா விற்பனை யில் ஈடுபட்ட. கணவன் ஓட்டம் மனைவி கைது மற்றும் 2 பேர் தப்பி ஓட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஏப்ரல், 2026

குடியாத்தம் அருகே கஞ்சா விற்பனை யில் ஈடுபட்ட. கணவன் ஓட்டம் மனைவி கைது மற்றும் 2 பேர் தப்பி ஓட்டம் !

குடியாத்தம் அருகே கஞ்சா விற்பனை யில் ஈடுபட்ட. கணவன் ஓட்டம் மனைவி கைது மற்றும் 2 பேர்  தப்பி ஓட்டம் !
குடியாத்தம் , ஏப்ரல் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம். நகர காவல் ஆய்வாளர் (பொ.)  ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் லட்சுமணபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சாலை யோரம் சந்தேகம் படும்படி நின்றிருந்த கும்பலை  சுற்றிவலைத்தனர். இதில் இரண்டு வாலிபர்கள் தப்பி ஓடினர். மீதமுள்ள இரண்டு பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்கிற அர்மன், முபாரக் மனைவி சம்ரீன் என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருப்பது கண்டுபிடி க்கப்பட்டது.  எட்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சிவா மற்றும் சம்ரீன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதுகுறித்து  சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சம்சுதீன், முபாரக் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad