குடியாத்தம் அருகே கனரக வாகனம் மின்கம்பத்தில் மோதி உடைந்து மூதாட்டி பலி !
குடியாத்தம் ,ஏப்ரல் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கல்லப்பாடி மதுரா சாலையோரப்பட்டி கிராமத்தில் இன்று 27-04-2026 மாலை 04.30 மணியளவில் TN 88 Y 2299 என்ற வாகன எண் கொண்ட கனரக வாகனம் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி கிரானைட் கல் ஏற்றி வந்த போது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் மேற்படி கிராமத்தை சேர்ந்த தங்கம்மா(வயது 75) க.பெ.லேட்.ராசப்ப கவுண்டர் என்பவரின் மீது மின் கம்பம் மற்றும் மின் கம்பிகள் விழுந்ததில் சம்பவ இடத்தில் உயிரிழந் துள்ளார்.. இவருக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்பது விசாரணையில் தெரிகிறது. மேற்படி விபத்து தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி இறந்த நபரின் பிரேதமானது உடற்கூறு ஆய்வு செய்யும் பொருட்டு குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக