புகார் மனு கொடுக்க வந்த நடக்க முடியாத நபரிடம் தரை தளத்தில் நேரடியாக மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் மாவட்ட எஸ்.பி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

புகார் மனு கொடுக்க வந்த நடக்க முடியாத நபரிடம் தரை தளத்தில் நேரடியாக மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் மாவட்ட எஸ்.பி.


தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்த விபத்தில் காயமடைந்து நடக்க முடியாதவரான பாலசுப்பிரமணியன் என்பவர் இன்று (28.08.2023) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரடியாக சந்தித்து புகார் மனு கொடுப்பதற்காக மாவட்ட காவல்துறை அலுவலகம் வந்திருந்தார்.


இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தரை தளத்திற்கு நேரடியாக வந்து மேற்படி பாலசுப்பிரமணியன் என்பவரிடம் பிரச்சனையை கேட்டறிந்து புகார் மனுவை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad