தேர்தலுக்கு மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ஜாக்டா ஜியோ கோரிக்கை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 ஏப்ரல், 2026

தேர்தலுக்கு மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ஜாக்டா ஜியோ கோரிக்கை !

தேர்தலுக்கு மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ஜாக்டா ஜியோ  கோரிக்கை !
வேலூர் , ஏப்ரல் 20 -
வேலூர் மாவட்டம் ஜாக்டா ஜியோ சார்பில் தேர்தல் பணியில் மாவட்ட முழுவதும் ஆசிரியர்கள் முழுமையாக பயன்படுத்தப் பட்டனர். எனவே தேர்தல் நடைபெறும்  நாளுக்கு அடுத்த நாள் 24.04.2026 அன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்க கோரி வேலூர் மாவட்ட ஜாக்டா ஜியோ அமைப்பினர் கோரிக்கைவிடுத்து ள்ளனர்.இன்று வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்க ஜாக்டா ஜியோ நிர்வாகிகள் வருகை தந்தனர்.  மாவட்ட ஆட்சியர் முகாம் சென்றிருப்பதால் தேர்தல் பிரிவு வட்டாட் சியர் வி.ரமேஷ் அவர்களை சந்தித்து கோரிக்கை  மனுவை ஜாக்டா ஜியோ நிர்வாகிகள் அளித்தனர்.  மேலும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத் திலும் மனு அளித்துள்ளனர். ஜாக்டா ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் முனைவர்.செ.நா.ஜனார் த்தனன் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டி.டி.ஜோஷி, ஜி.சீனிவாசன், ஆ.ஜோசப்அன்னையா மற்றும் மாவட்ட உயர்மட்டக்குழு உறுப் பினர்கள் ஆர்.ஜெயக்குமார், ஜி.டி. பாபு,  எம்.எஸ்.செல்வகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன், மகளிர் துணைக் குழு தலைவர் ச.ஜோதி, முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர், வேலூர் வடக்கு வட்ட கிளை தலைவர் எஸ்.சபரி கிரிவாசன், தமிழ்நாடு முதுநிலைப்பட்ட தாரி ஆசிரியர் கழக வேலூர் கல்வி மாவட்ட தலைவர் வி.திருக்குமரன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கோரிக்கை மனுவை அளித்தனர். 
கோரிக்கை மனுவில்கூறியிருப்பதாவது
  
* தேர்தல் பணியில் மாவட்ட முழுவதும் ஆசிரியர்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டனர். எனவே தேர்தல் நடைபெறும்  நாளுக்கு அடுத்த நாள் 24.04.2026 அன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்க  அறிவிக்க கோருகின்றோம். * 16.04.2026 முதல்பள்ளி மாணவர்களுக்கு கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் மட்டும் பள்ளி பணிகளுக் காக 25.04.2026 வரை வருகை தர பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.* 16வது  சட்டமன்ற தேர்தல் 06.04.2024 செவ்வாய் கிழமை நடைபெற்ற போது அதற்கு அடுத்த நாள்   07.04.2024 புதன்கிழமை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி களுக்கும் விடுமுறை நாளாக அன்றைய வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அ.சண்முக சுந்தரம் அவர்கள் ஆசிரியர்களின் கோரி க்கயினை ஏற்று அறிவித்துள்ளார்கள்.  
* தேர்தல் பணியில் மாவட்ட முழுவதும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் முழு மையாக பயன்படுத்தப்பட்டனர். தேர்தல் நடைமுறைகள் மற்றம் விதிகளுக்கு உட்பட்டு உடல் நலகுறைபாடு காரணமாக பணிசெய்ய இயலாத நிலையில் விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விலக்கு வழங்கிட கோருகின்றோம். * சட்டமன்ற தொகுதி மாறி பணி செய்ய பணிக்கப்பட்டுள்ள பலருக்கு தபால் வாக்குகள் இன்னமும் வழங்கப்படாத நிலை உள்ளது.  தாங் களும் உரிய நடவடிக்கை உடன் மேற்கொண்டு தபால் வாக்குகள் வழங்கிட ஜாக்டா ஜியோ பேராமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad