ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்.

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்.

தென்திருப்பேரை, ஏப்.19-
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதி தலங்களில் 9வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் சித்திரை பிரமோத்சவ திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

சித்திரை மாதம் உத்திரம் தினத்தன்று மூலவர் ஆதிநாதர் விக்ரகம் ப்ருகு மற்றும் மார்கண்டேய மகரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் உத்திர நட்சத்திரத்திற்கு 10 நாட்கள் முன்னதாக சித்திரை பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு சித்திரை பிரமோத்சவ திருவிழாவை முன்னிட்டு இன்று 19 தேதி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் அதை தொடர்ந்து திருமஞ்சனம், தீபாராதனை, நித்தியல் கோஷ்டி நடைபெற்றது. 

காலை 8.50 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி தாயார்களுடன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். உடன் நம்மாழ்வாரும் எழுந்தருளினார். காலை 8.55 மணிக்கு கொடிபட்டம் மாட வீதிகளை சுற்றி வந்து 9.40 மணிக்கு அர்ச்சகர் சுவாதி கொடியேற்றினார்.

கொடியேற்ற விழாவில் அர்ச்சகர்கள் கண்ணன். விவேக் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், செயல் அலுவலர் சதீஷ், ஆய்வாளர் நம்பி கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்

 23ஆம் தேதி புதன்கிழமை கிழமை கருட சேவை நிகழ்ச்சியும் 27 ம் தேதி தேர்த் திருவிழாவும் 28 ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

தினமும் காலைதோளுக்கினியானில் மாடவீதி ரதவீதியும் மாலை சுவாமி பொலிந்து நின்ற பிரான் பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம் கருட வாகனம் யானை வாகனம், இந்திர விமான வாகனம், குதிரை வாகனம், புன்னை மர வாகனம், வெட்டிவேர் சப்பரம், உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad