நாசரேத் : ஏப்:18, நாசரேத் பேரூர் தி.மு.க சார்பில் ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையரை திருத்த மசோதா தோல்வி அடைந்ததை கொண்டாடும் விதமாக நாசரேத் கே.வி.கே சாமிசிலை அருகே வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நாசரேத் பேரூர் தி.மு.க அவைத்தலைவர் கருத்தையா தலைமை தாங்கினார். பேரூர் கழக செயலாளர் ஜமீன் சாலமோன், பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார், மூக்குப்பேறி கிளை கழக செயலாளர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி அன்பு தங்கபாண்டியன், நகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய பிரதிநிதி ஞானராஜ், ராமச்சந்திரன், மாணிக்கராஜ், தேவதாஸ்,
நகர துணை செயலாளர் மாரியப்பன், ஜேம்ஸ், வார்டு செயலாளர்கள், மாற்கு தர்மக்கண், ஜாண்பென்சன், இளங்கோ, மனோகரன், அன்பு, ஜேஸ்பர், சிலாக்கியமணி, ஞானராஜ், டேவின் மற்றும் வார்டு பிரதிநிதிகள் சேகர், ஏசுதுரை, பால்ராஜ், பிரதீப், துரை, முருகானந்தம், சுந்தரம், நீல்துரை, சத்தியமூர்த்தி, கிருஷ்ணகுமார், சம்பத்குமார், ராபின்சன்,ஆபிரகாம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக