குடியாத்தம் அருகே காலி இடத்தில் ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக தகராறுஆட்டோ டிரைவருக்கு கத்தி வெட்டு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 ஏப்ரல், 2026

குடியாத்தம் அருகே காலி இடத்தில் ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக தகராறுஆட்டோ டிரைவருக்கு கத்தி வெட்டு !

குடியாத்தம் அருகே காலி இடத்தில் ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக தகராறு
ஆட்டோ டிரைவருக்கு  கத்தி வெட்டு !
குடியாத்தம், ஏப்.28 - 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செம்பேடு  பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53),  ஆட்டோ டிரை வர் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சதீஷ், கிரிபிரசாத் (வயது 29)  ஆட்டோ டிரைவர்கள். வெங்கடேசனுக்கும் சதீசுக் கும் இடையே ஆட்டோகளை காலி இடத் தில் நிறுத்துவது தொடர்பாக தகராறு இருந்தது.இந்நிலையில் நேற்று  சதீஷின் தம்பி கிரிபிரசாத், வெங்கடேசனுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும் கத்தியால் வெங்கடேசனை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த ரத்த வெள்ளத்தில் சரிந்த வெங்கடேசனை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக் காக குடியாத்தம் அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சை க்காக வெங்கடேசனை வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ்  வழக்குப் பதிவு செய்து கிரிபிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad