தென்திருப்பேரை, ஏப்.27-
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதி தலங்களில் 9வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் சித்திரை பிரமோத்சவ திருவிழா ஆண்டு தோறும் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சித்திரை மாதம் உத்திரம் தினத்தன்று மூலவர் ஆதிநாதர் விக்ரகம் ப்ருகு மற்றும் மார்கண்டேய மகரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவம் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பிரமோற்சவம் இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்சவம் திருவிழா கடந்த ஏப்ரல் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை 7 மணிக்கு சுவாமி பொலிந்து நின்ற பிரான் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது.
22ம் தேதி எம் பெருமானார் எதிர் சேவை நிகழ்ச்சியும் 23ம் தேதி கருடசேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது. கருடசேவையை நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 9ம் நாள் திருவிழாவான 27ம் தேதி தேரோட்டம் நடந்தது.
நேற்று காலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 4.30 மணிக்கு திருமஞ்சனம், காலை 5 மணிக்கு கோஷ்டி நடைபெற்றது. காலை 6.25 மணிக்குள் சுவாமி பொலிந்து நின்ற பிரான் திருத்தேரில் எழுத்தருளினார்.
8 மணியளவில் பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். மதியம் தேர் நிலைக்கு வந்தடைந்தது.
இன்று 28ம் தேதி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
விழாவில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், செயல் அலுவலர் பொறுப்பு வள்ளிநாயகம்.
கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக