ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பொறியியல் கல்லூரியின் 23வது விளையாட்டு விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 ஏப்ரல், 2026

ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பொறியியல் கல்லூரியின் 23வது விளையாட்டு விழா.

ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பொறியியல் கல்லூரியின் 23வது விளையாட்டு விழா.  

நிகழ்ச்சிக்கு ஆரம்பமாக நாசரேத் தூய யோவான் பேராலய ஆயர் ஆல்பர்ட் ஜெய்சிங் தாமஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். 

திருச்செந்தூர் தொழிலதிபர் லட்சுமணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்பித்தார்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  தனிப்பட்ட சாதனையாளர் பிரிவில் நான்காம் ஆண்டு மாணவன் ஆல்ட்ரின் ஸ்டுவார்ட், பெண்கள் பிரிவில் மார்ட்டின் பிரிஸ்கா மூன்றாம் ஆண்டு மாணவி ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். 

விழா முடிவில் மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவர்கள் இரண்டாம் இடத்தை பெற்றனர்.

விழா ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளர் மாமல்லன் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயக்குமார் அறிவுறுத்தலின்படி கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர், பேராசிரியர்கள் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad