தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே குலசேகரன் பட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருஷாபிஷேகத்தையொட்டி இன்று புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோயில் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வருஷாபிஷேக சிறப்பு பூஜையில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், வெங்கடேஸ்வரி, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் எஸ் ஆர் எஸ் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம்,
திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏபி ரமேஷ், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் மதன்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், திருச்செந்தூர் நகர திமுக துணைச் செயலாளர் தோப்பூர் பெருமகராஜன்,
மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கவுன்சிலர் செந்தில், திருச்செந்தூர் நகர இளைஞரணி அமைப்பாளர் கவுன்சிலர் தினேஷ் கிருஷ்ணா, மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி,
முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஹரி கிருஷ்ணன், மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் குலசை அலாவுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காகMT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக