ஸ்டாலின் என்றைக்கு பதவி ஏற்றாரோ அன்றைக்கு தமிழ்நாட்டுக்கு பிடித்தது சனி எடப்பாடியாரே முதலமைச்சராக இருந்திருக்கலாம் பொதுமக்கள் பேசிக் கொண்டிருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

ஸ்டாலின் என்றைக்கு பதவி ஏற்றாரோ அன்றைக்கு தமிழ்நாட்டுக்கு பிடித்தது சனி எடப்பாடியாரே முதலமைச்சராக இருந்திருக்கலாம் பொதுமக்கள் பேசிக் கொண்டிருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு.

ஸ்டாலின் என்றைக்கு பதவி ஏற்றாரோ அன்றைக்கு தமிழ்நாட்டுக்கு பிடித்தது சனி எடப்பாடியாரே முதலமைச்சராக இருந்திருக்கலாம் பொதுமக்கள் பேசிக் கொண்டிருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு.


கருணாநிதி ஒரு தலைமுறையில் நூறு தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டார் கதை கட்டுரை கவிதை யாருக்காக எழுதினார் நாட்டு மக்களுக்காகவா இல்லை அவர் வீட்டுக்காக? கருணாநிதியை பொதுமக்கள் மறந்து பத்து ஆண்டுகள் ஆகிறது, டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சை நம்பி விவசாயிகள் ரத்த கண்ணீர் வடிக்கின்றனர் தண்ணீர் திறந்து விடவில்லை நெற்பயிர்கள்  காய்ந்து போய் உள்ளது விவசாயிகளுக்கு ஆறுதல் கூட சொல்ல நேரமில்லை.


ஆகஸ்ட் 20 ஆம் தேதி எடப்பாடியார் ஆற்றுகிற உரைக்கு மக்கள் இளைஞர்கள் எழுப்புகிற கர ஒலி தான் நாட்டிலே ஆட்சி மாற்றத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து எடப்பாடியாரை முதலமைச்சராக ஆக்குகிற அடித்தளம் அமைகிற மாநாடாக அமையும்*அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் மதுரையில் வருகிற 20-ஆம் தேதி நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு பொதுமக்களை பங்கேற்க செய்யும் வகையில் திருமங்கலம் நகரம் மற்றும் ஒன்றிய கழகம் சார்பில் கப்பலூர் சுங்கச்சாவடி அருகே பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களுக்கு விளம்பர லோகோ வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.


தொடர்ந்து இருசக்கர வாகனத்திற்கும் ஆட்டோவிற்கும் விளம்பர லோகோவை ஒட்டி வைத்து தொடங்கி வைத்தார், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் விளம்பர லோகோ வழங்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் ஜே.டி விஜயன் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது, பொதுமக்களுக்கு மரக்கன்று விளம்பர லோகோவை வழங்கி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் சிறப்புரையாற்றியதாவது, பொதுமக்கள் எடப்பாடியாரை முதலமைச்சராக இருந்திருக்கலாம் என பேசிக்கொள்கின்றனர் ஸ்டாலின் என்னைக்கு பதவியேற்றாரோ அன்னைக்கு தமிழ்நாட்டுக்கு புடிச்சது சனி என மக்கள் பேசிக் கொள்கின்றனர் எங்கு பார்த்தாலும் விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆனால் ஒன்றில் மட்டும் சரியாக உள்ளார்.


தமிழ்நாடு கருணாநிதியை 10 வருடம் மறந்து விட்டது அவரைப் பற்றி யாரும் பேசவில்லை ஏதாவது செய்து இருந்தால் தான் பேசுவார்கள் சத்துணவு கொண்டு வந்தது யார் என்று கேட்டால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் என்று கூறுவார்கள் கருணாநிதி ஒரு தலைமுறையில் 100 தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டார் கதை கட்டுரை கவிதை எழுதினார் யாருக்காக எழுதினார் நாட்டுக்காக எழுதினாரா? அவருடைய வீட்டுக்காக தான் எழுதினார் அதனால் தான் கருணாநிதி மறந்து மக்கள் பத்தாண்டுகளாகிறது ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வருடத்தில் எந்த போர்டு கல்வெட்டை பார்த்திட கூடாது அப்பா பெயரை வைக்க சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின் பெயரை வைக்க சொல்கிறார் இப்படியே போனால் தமிழ்நாடு எங்கே போகிறது என மக்கள் வேதனைப்படுகின்றனர்.


டெல்டா மாவட்டத்தில் தண்ணீர் திறந்து விடவில்லை நெற்பயிர்கள் காய்ந்து போய் உள்ளது ஸ்டாலின் சென்று கடமடை வரை தண்ணீர் செல்லும் என சொல்லிட்டு வந்துட்டார் முதலமைச்சர் பேச்சை நம்பி நாத்து நட்டு விட்டனர் ஆனால் கருகிவிட்டது ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர் அதை பார்த்து ஆறுதல் கூட சொல்லப் போக முடியவில்லை தன்னுடைய மகனுக்கு பட்டாபிஷேகம் நடத்த அடித்தளம் செய்து கொண்டிருக்கிறார்.


மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் குடிகொண்டுள்ள மதுரையில் அண்ணன் எடப்பாடி யார் ஆற்றுகிற உரைக்கு மக்கள் இளைஞர்கள் எழுப்புகிற கர ஒலி தான் நாட்டிலே ஆட்சி மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து எடப்பாடி முதலமைச்சராக  தமிழ்நாட்டு செஞ்சார் கோட்டையில் தேசிய கொடி ஏற்றுகின்ற வரலாற்று நினைவாக அடித்தளம் அமைகிற மாநாடாக இருக்கிறது என சிறப்பு உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/