நான் பிறந்தது தஞ்சை மாவட்டம் ஆனால் என் தாய் வீடு என்றும் தேனி மாவட்டம் என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார் டிடிவி தினகரன். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

நான் பிறந்தது தஞ்சை மாவட்டம் ஆனால் என் தாய் வீடு என்றும் தேனி மாவட்டம் என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார் டிடிவி தினகரன்.

யாரோ ஒரு சிலர் ஒரு பத்து சதவீதத்தினர் விலை போய் இருக்கலாம் ஆனால் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எதற்கும் விலை போகாத தொண்டர்கள் எங்கள் இருவரின் பின்னால் திரண்டு இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. இங்கே கூடியிருக்கும் கூட்டம் தானாக கூடிய . இது காசு கொடுத்து கூட்டிய கூட்டம் இல்லை. 


இங்கே வருகை புரிந்திருப்பவர்கள், டாஸ்மாக்கிற்கும் - கோழி பிரியாணிக்கும், காந்தி நோட்டுக்காக அல்ல, அம்மா என்கிற மாபெரும் சக்தியின் பிம்பங்களாக அணிவகுத்துள்ளார்கள்,  தேனி மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து வருவாய் மாவட்டம், அதையும் தாண்டி சில மாவட்டங்களிலே நடந்து கொண்டிருக்கின்ற ஆர்ப்பாட்டம் இன்று அருமை சகோதரர் ஓபிஎஸ் அவர்கள் பின்னால் திரண்டு இருக்கின்ற அம்மாவின் விசுவாசிகளும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அம்மாவின் விசுவாசிகளும் ஒன்றாக கூடியுள்ளார்கள்


இன்று முதன் முதலாக அம்மா அவர்கள், நாமெல்லாம் தெய்வமாக கும்பிட்டு நம்மை காக்கும், நமது இதய தெய்வம் அம்மா அவர்கள், வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சென்று தங்கிய கொடநாடு பங்களாவில் இருந்த காவலாளியை கொலை செய்து, அங்கு அம்மாவின் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர், அதனை தொடர்ந்து சில விபத்துகளையும் ஏற்படுத்தி குற்றவாளிகளை மரணத்துக்கு காரணமானவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும், அதற்கு காரணமானவர்கள்?, யார் என்பது அம்மாவின் தொண்டர்கள் அனைவருக்கும் தெரியும், ஏன் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும், அன்றைக்கு சாட்சிகள் அழிக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். 


தேர்தல் அறிக்கையில் தேர்தலுக்கு முன்பு இன்று முதலமைச்சராக இருக்கின்ற ஸ்டாலின் அவர்கள் தேர்தல் முடிந்த பிறகு இன்னும் ஆறு மாதங்களில் நாங்கள் ஆட்சிக்கு பொறுப்பேற்று 90 நாட்களுக்குள் கோடநாடு கொலை  குற்றவாளிகளை, கொள்ளை அடித்தவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் அவர்களை நாங்கள் விடமாட்டோம் என்று கூறினார்


எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின்க்கு நமக்கு தெரிஞ்ச உண்மை அவருக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தோம், ஆட்சி அதிகாரத்தில் இருந்த காரணத்தினால்சாட்சிகள் அழிக்கப்பட்டிருப்பது என்பது கடைக்கோடியில் உள்ள  குப்பனுக்கும், தெரியும் அம்மாவின் தொண்டர்கள் அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரிந்த . ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அவர்களுக்கும் தெரிந்திருக்கும் என்றுதான் எல்லோரும் நினைத்திருந்தோம். ஆனால் ஆட்சி பொறுப்புக்கு வந்து இன்றைக்கு இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. மூன்று மாதங்களிலே முடித்து விடுவோம் என்று சொன்னவர்கள் 30 வாரம் ஆகப்போகின்றது இன்னும் அந்த வேலையை செய்து முடிக்கவில்லை.வழக்கம்போல் இந்த தேர்தல் வாக்குறுதியும் ஸ்டாலின் அவர்கள் மறந்து, இன்னும் சொல்லப்போனால் சில மாதங்களுக்கு முன்பு சட்டமன்றத்திலே அங்கு சாட்சிகளின் அடிப்பபடியில் உண்மையான குற்றவாளிகளை நாங்கள் நெருங்கி, அந்த சாட்சிகளை கலைத்தவர்களை தாண்டி காவல்துறை நெருங்கிவிட்டது என்று கூறினார். 

பிறகு இன்றும் இன்று வரை கைது செய்யாத காரணத்தினால் தான் அம்மாவின் உண்மையான தொண்டர்களும் தமிழ்நாட்டு மக்களும் மிகவும் வருத்தப்படுகின்றனர். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் இந்த போராட்டத்தை அறிவித்தார்கள். என்னிடம் ஊடக நண்பர்கள் கேட்ட பொழுது அவர்களின் போராட்டத்திற்கு எங்களின் ஆதரவு உண்டு என்று நான் ஊடகத்தில் சொல்லி விட்டேன் திரு.ஓபிஎஸ் அவர்கள் சொல்லித்தான் நான் கலந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. 


நாங்களாகவே கலந்து கொள்ள வேண்டும் என்று நமது இயக்கத்தில் இருந்த மாவட்ட செயலாளரிடம் சொல்லிவிட்டேன். அதனால்தான் நான் சொன்னேன் எங்களின் ஆதரவு உண்டு என்று அதற்காக நானே கலந்து கொள்வது நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.  ஓபிஎஸ் அவர்களின் பின்னால் இருக்கின்ற தொண்டர்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள், நமக்குள் இருந்த வருத்தங்களை எல்லாம் விட்டுவிட்டு இன்றைக்கு ஒன்றிணைந்து இருக்கின்றோம். நடந்த நிகழ்வு இயற்கையாக நடந்தது, காரணம் அம்மாவின் தொண்டர்கள் மடியிலே நெஞ்சிலே வீரமிக்கவர்கள், நெஞ்சிலே ஈரம் அம்மா இருக்கின்ற மையப் புள்ளிகளை இணைந்து அனைவரும் தமிழ்நாடு முழுவதும் ஒன்றிணைந்துவிட்டோம். 


ஆனால் ஒரு சிலர் உங்களுக்கு தெரியும் இங்கு இருப்பது தொண்டர் படை, அங்கு இருப்பது குண்டர் படை, டெண்டர் படைதான் அங்குள்ளது. அச்சாணி இல்லாத ஒரு வண்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று அங்குள்ளவர்கள் விமர்சிக்கின்றார்.  அச்சாணி என்றால் என்ன தெரியுமா? அவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் சந்துல "சிந்து"பாடி சிந்து நாங்க பொழுதுபோக்காக வீட்டில் இருப்போம் ஆனா சந்தில போய் சிந்து பாடி சிந்துபாத் வேலை செய்பவர்கள் அச்சாணிய பற்றி பேசுகிறார்கள் .ஒரு இயக்கத்தின் உண்மையான ஆச்சாணி என்பது விசுவாசம் மிக்க தொண்டர்கள் தான். என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை என அவர்கள் கண்ணுக்கு விசுவாசம் என்றால் என்னவென்று தெரியாது. 


தொண்டர்களின் விசுவாசம் என்னவென்று தெரியாது துரோகத்தை தவிர வேறு எதையும் அறியாதவர்கள். அவர்களுக்கு அச்சாணி இல்லை, அச்சாணி முறிந்து போனவர்கள். டென்டருக்காக ஒன்று கூடியவர்கள். மடியிலே கனமுள்ளவர்கள், அவர்களுக்கு வருங்காலங்கள் நிரூபிக்கும் நாங்கள் இருவரும் இணைந்து இருப்பது சுயநலத்திற்காக அல்ல, முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக அல்ல இந்த பதவி பற்றி சிந்திக்காதவர்கள், அம்மாவின் கட்சியும், அம்மாவின் சின்னமும், புரட்சி தலைவர் கண்ட வெற்றி சின்னம், புரட்சித்தலைவர் உருவாக்கிய அம்மாவின் கட்சியும் அம்மாவின் சின்னமும் புரட்சித்தலைவர் கண்டெடுத்த வெற்றி சின்னம் துரோகத்தை எதிர்த்து புரட்சித்தலைவர் அவர்கள் உருவாக்கிய அந்தக் கட்சி ,அந்தச் சின்னம் இன்றைக்கு துரோகத்தால் ஒரு சிலர் அபகரித்து  அவர்களிடம் இருந்து அதை மீட்டு எடுத்து அம்மாவின் தொண்டர்களிடையே, உங்கள் கையில் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இருவரும் ஒன்றினைத்திருக்கின்றோம், தவிர எங்களுக்கு டெண்டர் ஆசையில்லை, நாங்கள் சந்தில சிந்து பாடவேண்டிய அவசியம்இல்லை, எங்களுக்கு ஊழல் செய்வதற்கு துளியும் நம்பிக்கை இல்லை.


கோடநாடு கொலை கொள்ளையில் சம்பந்தப்பட்ட, காரணமான குற்றவாளிகளை இந்த அரசாங்கம் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்காக திரு. ஸ்டாலின் அவர்கள் விரைவாக செய்ய வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு காவல்துறை என்பது ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையானது. அவர்களுக்கு தெரிந்திருக்கும். அதை அவர்கள் வெளியில் கொண்டுவர வேண்டும். அந்த கொலை குற்றவாளிகளை, கொள்ளைக்காரர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று கண்டன கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடக்கின்றது.  


இங்கு நான் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளித்த அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கும் சையது கான் அவர்களுக்கும் இங்கு பெருந்திரளாக வந்திருக்கின்ற அம்மாவின் தொண்டர்களாகிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கும் ஓபிஎஸ் தலைமையிலான அம்மாவின் தொண்டர்களுக்கும் எனது நன்றியையும் வணக்கத்திணையும் சொல்லி கொள்வதாக பேசினார்.


இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்டத்தில் இருந்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய லட்சக்கணக்கான தொண்டர்கள் வாகனங்களில் அணிவகுத்து வந்தது திமுகவினருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தும், இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மூலமாக லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்கள் அனைவரும் தங்க மகன் ஓபிஎஸ் மற்றும் டி டி வி தினகரன் பின்னால் அணிவகுத்து உள்ளார்கள் என்பதை எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமைந்துள்ளது என பொதுமக்கள் வாய் பட பேசி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad