மணிப்பூர் பழங்குடி சிறுபான்மை மக்களின் மீது நடந்த தாக்குதலை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி அகிம்சை வழியில் போராட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

மணிப்பூர் பழங்குடி சிறுபான்மை மக்களின் மீது நடந்த தாக்குதலை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி அகிம்சை வழியில் போராட்டம்.


இன்று இரவு 7 மணி அளவில் போடியில் அமைந்துள்ள தேவரின் நேசம் ஆலயத்தில் மணிப்பூர் பழங்குடி சிறுபான்மை மக்களின் மீது நடந்த தாக்குதலை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியினரும் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மதபோதவர்களும் இணைந்து மெழுகுவர்த்தி ஏந்தி அகிம்சை வழியில் போராட்டம் இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் போடி வட்டார தலைவர் திரு. ஜம்பு சுதாகர் அவர்கள் தேனி மாவட்டசெயலாளர் கோபி காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை தலைவர் ராஜா முகமது துணைத் தலைவர் முகமது இர்ஃபான் மற்றும் சன்னாசி சிவகுமார் மற்றும் மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  


நமது அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில் நமது மாநில முதன்மை பொதுச் செயலாளர் திரு. ரூபன் சரவணக்குமார் மற்றும் மாநில ஆலோசகர் பெரிய குட்டி என்ற சண்முகசுந்தரம் தேனி மாவட்ட போதகர் அணி செயலாளர் மாறன் பாஸ்டர் தேனி மாவட்ட செயலாளர் லாசர் மற்றும் துணை செயலாளர் போடி பாஸ்கரன் மகளிர் அணி செயலாளர் திருமதி. தமிழ் செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.  


நமது தென் மண்டல போதகர் அணி செயலாளர் திரு. ஜெயப்பிரகாஷ் அவர்கள் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினார். மற்றும் போடி வட்டார மத போதகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad