நீலகிரி மாவட்டம் கூடலூர், தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுனருக்கான வளாகா நேர்காணல் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டம் கூடலூர், தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுனருக்கான வளாகா நேர்காணல் நடைபெற்றது.

 


கூடலூர், தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுனருக்கான வளாகா நேர்காணல் நடைபெற்றது. 


கூடலூர், தேவர்சோலை சாலையில் இயங்கி வரும் தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜோர்ஜ் தலைமை தாங்கினார். ஆசிரியர் செல்வகுமார் வரவேற்றார்.


சேரம்பாடி, சோலாடியில் இயங்கி வரும் NESTLE INDIA Ltd, தொழிற்சாலையின் மனித வள மேம்பாட்டு அதிகாரி ஸ்ரீமுருகன் சுப்ரமணியன், பொறியியல் மேலாளர் பிரபு ஆகியோர் நேர்காணல் நடத்தினர். 


பயிற்சி நிலையத்தில் படித்த  பிட்டர், வயர்மேன் மற்றும் எலக்ட்ரிசியன் பிரிவு மாணவர்களுக்கு தொழில் பழகுநருக்கான (APPERENTICESHIP) தேர்வில்  பயிற்சி நிலையத்தின் இரண்டாம் ஆண்டு பொருத்துநர் மற்றும் மின்கம்பியாளர் பிரிவுகளிலுள்ள மாணவர்கள் 22 பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு பயிற்சியின்போது முதலாம் ஆண்டு ரூ.11500/- வழங்கப்படும் என கூறினர். 


முடிவில் ஆசிரியை K. அம்மினி நன்றியுரை கூறினார். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad