மதுரை வாடிப்பட்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

மதுரை வாடிப்பட்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

வாடிப்பட்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.


வாடிப்பட்டி, ஆகஸ்ட்: 27.மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு  இலவச கண் பரிசோதனை தேமுதிக வாடிப்பட்டி பேரூர் கழகம் சார்பில் நடத்தப்பட்டது இந்த இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது பேரூர் செயலாளர்.பாலாஜி  தலைமை வகித்தார்.


 தெய்வேந்திரன் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தனர்.கோபால் சோமநாதன் வரவேற்றனர். மதுரை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர்
 பாலச்சந்திரன் துவக்கி வைத்தார்
 தங்கராஜ், கர்ணன், சோனைமுத்து ,சத்யலிங்கேஸ்வரர் ,கிருஷ்ணன், குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.  முருகன் தமிழன்(எ)முருகன், சங்குபிள்ளை, மூர்த்தி அரிமலை முருகன்,கார்த்தி வாழ்த்துரை வழங்கினர். முகாமில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண் நோய் சம்பந்தமான பார்வை சம்பந்தமான சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கினர். இதில் வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள்  கலந்து கொண்டு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு பரிசோதனை செய்து பலன் அடைந்து கொண்டனர்.

ரவி, மதுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad