புதுக்கோட்டை அரசு ராணியார் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஆகஸ்ட், 2023

புதுக்கோட்டை அரசு ராணியார் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அரசு ராணியார் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல், மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை விண்ணப்பம் பெறுதல், சரிபார்த்தல் மற்றும் பிற மறுவாழ்வு உதவி வழங்க பரிந்துரைகள் செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது,

மேற்கண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், புதிய அடையாள அட்டைகள் 27, புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டைகள் 29, UDID கார்டு விண்ணப்பம் 71, மற்றும் நலத்திட்ட உதவிகள் மனவளர்ச்சி குறைபாடு உடைய குழந்தைகளுக்கு கற்றல் பயிற்சி (MSIED)உபகரணங்கள்,20 நபர்களுக்கும், நடை பயிற்சி உபகரணங்கள்,14 நபர்களுக்கும், காதொலி கருவிகள், 4 நபர்களுக்கும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஐ. சா. மெர்சி ரம்யா அவர்கள் வழங்கினார், நலத்திட்ட உதவிகளின் மொத்த மதிப்பு ரூபாய் 1,22,000 ஆகும்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. உலகநாதன்,புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் திரு. வை. முத்துராஜா, MBBS,.புதுக்கோட்டை நகரமன்ற தலைவர் திருமதி. எஸ். திலகவதி செந்தில்குமார்,மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad