தூத்துக்குடியில் நடந்த தென் மண்டல ரோலர் ஸ்கேட்டிங்கில் பாளை.மாணவி முதலிடம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடியில் நடந்த தென் மண்டல ரோலர் ஸ்கேட்டிங்கில் பாளை.மாணவி முதலிடம்.


தூத்துக்குடியில் நடந்த தென் மண்டல அளவிலான ரோலர் ஸ்கேட்டிங்கில் பாளை.மாணவி ஜோஷினி முதலிடம் பெற்றார். தூத்துக்குடி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகள் சங்கம் சார்பில் இன்று(நேற்று 27-08-2023)தென் மண்டல அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் நடைபெற்றது.போட்டிகளை தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் சுந்தர் சிங் தொடங்கி வைத்தார். 

இந்த போட்டியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவிகள் ஜுனியர் அளவிலான போட்டிகளில் பாளை.வி.எம்.சத்திரம் அந்தோணி பப்ளிக் பள்ளி 7ம் வகுப்பு மாணவி ஜோஷினி 500 மற்றும் 1000 மீட்டர் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் முதலிடம் பெற்றார்.


அவருக்கு தூத்துக்குடி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகள் சங்க செயலாளர் சுரேஷ்குமார் மெடல்கள் அணிவித்து பரிசுகள் வழங்கினார்.மேலும் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் அவர் மெடல்கள், பரிசுகள் வழங்கி கவுரவித்தார். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் ஜுலிட்டா, துணை தலைவர்கள் மாணிக்கம், பாஸ்கர், நெல்லை ஸ்கேட்டிங் பயிற்சியாளர் வேலுச்சாமி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad