கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கிணறு வெட்டும் பனியின் போது மண் சரிந்து தொழிலாளி பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஆகஸ்ட், 2023

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கிணறு வெட்டும் பனியின் போது மண் சரிந்து தொழிலாளி பலி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வசந்தபுரம் பழனிச்சாமி என்பவர் விவசாய நிலத்தில் கிணறும் தோண்டும் பணி நடைபெற்று வந்துள்ளது. கிணறு தோண்டும் பணியில், கொல்லநாயக்கனூர்ரை சேர்ந்த வெங்கடேசன் உள்ளிட்ட 3 பேர் ஈடுபட்டுடிருந்தனர். இன்று காலை 7 மணிக்கு கிணற்றில் உள்பகுதியில் வெடி வைத்து தகர்த்துள்ளனர் வெடிவைத்து இரண்டு மணி நேரம் கழித்து கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்


35 அடி ஆழத்தில் கிணறு தோண்டிக்கொண்டிருந்தபோது, மண் சரிந்து விழுந்துள்ளது.  இந்த மண் சரிவில் சிக்கி, 54 வயதே ஆன வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்தவர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, ஊத்தங்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 



- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ்.சத்திய நாராயணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad