திருப்பூர் மேயர் தினேஷ்குமார் திடீர் ஆய்வில் அம்பலமானது சுகாதார அதிகாரிகளின் தில்லு முல்லு!
மாண்புமிகு திருப்பூர் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த ந. தினேஷ்குமார் பொறுப்பில் உள்ளார். இவர் திடீர் திடீரென பல்வேறு இடங்களில் நேரடி ஆய்வு செய்வார் வார்டுகளில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்வார் அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியில் ஸ்மார்ட் பேருந்து நிலையமாக முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பேருந்து நிலையம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு உள்ளது. இங்கு சுகாதார பணிகள் பற்றி பார்வையிட மேயர் தினேஷ்குமார் திடீரென நேரடி ஆய்வுக்கு சென்றபோது இலவச சிறுநீர் கழிப்பிடங்களை உள்ளே சென்று பார்வையிட்டார். அங்குள்ள சிறுநீர் கழிப்பிடம் சிறிதும் சுத்தம் செய்யாமல் சிறுநீரால் நிறைந்து கிடப்பதை பார்த்து உடனடியாக சுகாதார அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார். தினமும் கழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தார். மேயரின் இந்த நேரடி ஆய்வு நடவடிக்கையால்அதிர்ந்து போன சுகாதார அதிகாரிகள் சிக்கி தவித்தனர். திருப்பூர் மாநகராட்சி பொருத்தவரை பணியாற்றும் அதிகாரிகள் சில பேர் சம்பள கவரை தவறாமல் வாங்குவார்கள் தங்கள் துறைகளில் நடக்கும் பணிகளை நேரடியாக பார்வையிடுவதில்லை சரிவர செய்வதும் இல்லை என்பது தொடர்கதையாக உள்ளது.
அது சாலை பணியாகட்டும் ,தனியார் குடிநீர் ,பாதாள சாக்கடை பணிகள் ஆகட்டும் இது போன்ற கழிப்பிடங்கள் ஆகட்டும் அதிகாரிகள். பார்வையிடுவதை இல்லை என்பதே இப்போது மேயர் ஆய்வில் வெட்ட வெளிச்சமானது. மக்கள் வரிப்பணத்தில் வாங்கும் சம்பளத்திற்கு சரியாக வேலை செய்ய வேண்டும் எனவும் மேயர் கழிப்பிடத்திற்கு உள்ளே சென்று ஆய்வு செய்ததை பாராட்டியும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக