செங்கல்பட்டில் ஒ.பன்னீர்செல்வம் அணி சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஓ பன்னீர் செல்வம் அணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் ஒ.பன்னீர்செல்வம் அணி கொடாநாடு கொலை கொள்ளை வழக்கு நடவடிக்கை எடுக்காததை தி.மு.க.அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் அம்மன் வைரமுத்து, கிழக்கு மாவட்ட செயலாளர் தென்னரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுகவின் மாவட்ட துணை செயலாளர் காளிதாஸ், மாவட்ட பொருளாளர் கூடுவாஞ்சேரி எல்.ஆனந்தன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், செங்கல்பட்டு நகர செயலாளருமான எஸ்.ரகுநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் மாரிஜான்சன், அ.ம.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் எம்.கோதண்டபாணி, வடக்கு மாவட்ட செயலாளர் ம.கரிகாலன், மத்திய மாவட்ட செயலாளர் ஏ.சதீஷ்குமார், செங்கல்பட்டு நகர செயலாளர் செந்தில், காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆத்தூர் ஜெ.நவீன், கூடுவாஞ்சேரி நகர செயலாளர் குமார், மறைமலைநகர் நகர செயலாளர் வி.சரவணன், கே.வீரமணி, கே.ஆர்.கமலகண்ணன், எஸ்.சுரேஷ் கிருஷ்ணன், ஊரப்பாக்கம் ஊராட்சி செயலாளர் எம்.பி.ஒய்.சங்கர்,கிளைச் செயலாளர்கள் என்.ராஜா, எம்.வெங்கடேசன், அருள், கே.வீரன், மலர், கிருஷ்ணவேணி, வசந்தன், பி.வரதன், தீபக், கோதண்டராமன் ஆகியோர் உள்பட 500க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக